பாடசாலை மாணவியை கடத்தி சீரழித்த காவல்துறை அதிகாரிக்கு விதிக்கப்பட்டது 50 வருட கடூழிய சிறை
பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று, கடுமையான பாலியல் அத்தமீறலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், காவல்துறை இன்ஸ்பெக்டர் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 50 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதில் 15 ஆண்டுகளுக்குள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குருநாகல் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நான்கு தனித்தனி குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார (முன்னர் வடமேல் மாகாண உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியவர்) இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம்
தீர்ப்பை வழங்கிய நீதிபதி, அரசுத் தரப்பு முன்வைத்த நான்கு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சிறைத்தண்டனையுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
மேலும், நான்கு குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் தலா 50,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் கூடுதலாக ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |