கொழும்பில் கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகளுடன் சிக்கிய நபர்
Sri Lanka Police
Colombo
By Laksi
கொழும்பின் புறநகரான வத்தளையில் கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நேற்று (2) நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 கோடி ரூபாய் பெறுமதியான மாத்திரைகள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் Pregab 150 mg 192,000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 10 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 14 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்