கடமை முடிந்து வீடு திரும்பிய பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்!
srilanka
police
death
By S P Thas
புத்தளம் ஆனமடுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடுவை வல்பாலுவ பிரதேசத்தை சேர்ந்த 69 வயதான பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடமை முடிந்து வீட்டுக்கு சென்ற இந்த அதிகாரிக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் உயிரியல் மாதிரிகள் கொண்டு பரிசோதனை நடத்த மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த அறிக்கை கிடத்த பின்னர் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி