தேசபந்துவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
கடந்த பத்தாம் திகதி (ஏப்ரல்) பிணையில் விடுவிக்கப்பட்ட போது உத்தரவுகளை மீறி தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை அவமதித்தாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (25) தெரிவித்துள்ளது.
அதன்படி, நீதிமன்ற அவமதிப்புக்காக முதல் கட்டத்திலேயே வழக்குத் தொடர மாத்தறை நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லாததால், தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகாரங்களை கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததை விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணைகளுக்கு உதவ ஒரு காவல்துறை குழுவை பரிந்துரைத்து அனுப்புமாறு பிரதி காவல்துறை மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயமானது தேசபந்து தொடர்பான விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவினால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விசாரணை குழுவிற்கு உதவுவதற்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி ஆலோசகர்) திலீப பீரிஸ் மற்றும் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜித பெரேரா ஆகியோரையும் சட்டமா அதிபர் நியமித்துள்ளார்.
முதற்கட்ட கலந்துரையாடல்
இதேவேளை, இந்தக் குழு நாடாளுமன்றில் இன்று (25) கூடிய போது, மேலும் எவ்வாறு முன்னேறுவது மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை எவ்வாறு ஈடுபடுத்துவது என்பது குறித்து முதற்கட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
இதன்படி, எதிர்காலப் பணிகள் குறித்து முடிவுகளை எடுக்க, குழு மீண்டும் 28.04.2025 அன்று கூடுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
