ஜனாதிபதி தேர்தல்: காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்!
தேர்தல்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் இடம்பெறும் குற்றங்களை கையாள்வது குறித்து காவல் நிலையங்களிற்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும், செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமூக ஊடகங்கள் பிரசார நடவடிக்கைகள் மற்றும் வேட்பாளர்களை குறிவைத்து விமர்சனங்களுக்கு முதன்மையான தளமாக மாறியுள்ளது.
இந்தநிலையில், சமூக ஊடகங்கள் (Social Media) குறித்த முறைப்பாடுகளை எவ்வாறு கையாள்வது மற்றும் அவற்றை எவ்வாறு நீக்குவது என்பது குறித்த வழிகாட்டுதல்களை காவல்துறை தலைமையகம் அனைத்து காவல் நிலையங்களிற்கும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை அதிகாரி
அத்துடன், தடைசெய்யப்பட்ட தேர்தல் பிரசார உள்ளடக்கங்கள் பரப்படுபவது, குற்றவாளிகளை அடையாளம் காண்பது தொடர்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட காவல்துறை அதிகாரியொருவர் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பதிவுகளை அகற்றுவது, குற்றமிழைத்தவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை உட்பட தேர்தல் காலத்தில் சமூக ஊடக விவகாரத்தினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அனைத்து காவல் நிலையயங்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவது தொடர்பில் காவல்துறையினர் தொடரந்து, சமூக ஊடகங்களை அவதானித்து வருவதாகவும் ஜனாதிபதி வேட்பாளர்களிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் விமர்சனங்கள் குறித்த பல முறைப்பாடுகளை ஆராய்ந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |