மலசலகூடத்தில் கஞ்சா அருந்திய காவல்துறை அதிகாரி - விசாரணையில் சிக்கிய கஞ்சா பொதி
காவல்துறை மலசலகூடத்தில் கஞ்சா அருந்தியபோது பாணந்துறை தெற்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட உதவி காவல்துறை அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று (20) முதல் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் உள்ள பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய உதவி காவல்துறை அதிகாரியான நிஷாந்த சேனாரத்ன என்பவரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கஞ்சா பொதி
குறித்த உதவி காவல்துறை அதிகாரி நேற்று (19) கேட்போர் கூடத்தின் மலசலகூடத்தில் கஞ்சா அருந்திக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பயணப் பையை சோதனையிட்ட போது, சிறிய இளஞ்சிவப்பு பையில் இருந்த கஞ்சா பொதியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

