பரிதாபமாக உயரிழந்த நபர்: பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை
கிணறுகள் போன்ற பாழடைந்த மூடப்பட்ட இடங்களில், குறிப்பாக நீண்ட காலமாக சூரிய ஒளி படாத தேங்கி நிற்கும் சேறு நீரைக் கொண்ட இடங்களில் மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.
அதிகாரிகளின் சரியான ஆய்வு அல்லது பாதுகாப்பு நெறிமுறைகளைப் பயன்படுத்தாமல் அத்தகைய பகுதிகளுக்குள் நுழைவது ஆபத்தானது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பலாங்கொடை, முல்கமவில் வசிக்கும் 39 வயதான ஒருவர் மயக்கமடைந்து நீண்ட காலமாக மூடி வைக்கப்பட்டிருந்த கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிழந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு சம்பவம்
கல்தோட்டை காவல் பிரிவின் கல்தம்யாய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று இரண்டு நண்பர்களுடன் அந்த நபர் வந்து, வீட்டிற்கு அருகில் நீண்ட காலமாக மூடி வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த கிணற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன் சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளார்.
தண்ணீரை அகற்றிய பிறகு, அவர் கீழே உள்ள சேற்றை அகற்ற கிணற்றுக்குள் நுழைந்தபோது சுயநினைவை இழந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
