நூற்றியெட்டு தேங்காய் உடைத்து வழிபட்டு மட்டக்களப்பு நோக்கி நகரும் பேரணி!
srilanka
protest
polikandi
poththuvil
By Vasanth
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்ட பேரணி தற்போது அம்பாறை எல்லையை கடந்தது மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
இதன்போது ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டு அனைத்து தமிழ் உறவுகளும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இதேவேளை தற்போது உரிமைகளை வென்றெடுக்கும் மாபெரும் பேரணி பெரியகல்லாறுப் பகுதியையடைந்துள்ளது. அத்துடன் இன்றைய பேரணி களுவாஞ்சிக்குடியில் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


