இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த துயரம்
Colombo
Sri Lanka Tourism
Sri Lanka Police Investigation
Poland
By Jaso
இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
61 வயதான போலந்து நாட்டு பிரஜையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
பாணந்துறை கடற்கரையில் நேற்று (20) மாலை நீராடச் சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாணந்துறை கடற்கரைக்கு நீராட
பாணந்துறை - தெற்கு காவல்துறை பிரிவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளார்.

இதன்போது, போலந்து நாட்டு பிரஜை கடலில் மூழ்கியநிலையில் ஹோட்டலின் உயிர் பாதுகாப்பு அதிகாரியால் மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 17 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்