கல்விக்காக இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி..!
கல்விக்காக இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்த கணவன்-மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலந்து மற்றும் துருக்கியில் கல்வியுடன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்த கணவன்-மனைவி இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக காவல்துரையினர் கைது செய்துள்ளனர்.
திம்பிரிகசாய பிரதேசத்தில் இயங்கி வந்த இந்த போலி வேலைவாய்ப்பு நிறுவனம், போலந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் தொழில் வழங்குவதாக கூறி ஒருவரிடமிருந்து தலா 555,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டதாக பணியகம் கூறுகிறது.
விசாரணை
சோதனையின் போது, அந்த இடத்தில் கிடைத்த 11 கடவுச்சீட்டுகள், 4 பற்றுச்சீட்டு புத்தகங்கள், 50 பிரச்சார துண்டு பிரசுரங்கள் உட்பட பல ஆவணங்கள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் இருவரும் 5 நாட்கள் வரை காவலில் வைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் காவல்துரையினர் தெரிவித்துள்ளனர்.