கட்சி தாவிய உறுப்பினர்கள் - மொட்டுக் கட்சி மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கை!
வேறு கட்சிகளில் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை கட்சியில் இதுவரை வகித்த சகல பதவிகளில் இருந்தும் நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக்குழு கூடி இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.
அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
பொதுஜன பெரமுன உறுப்பினர்களை நீக்குவதற்கு
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தவிசாளர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் விரைவில் தெரிவு செய்யப்படுவார்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் வேறு கட்சிகளில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
