பொது வேட்பாளராகக் களமிறங்குவாரா விஜயதாஸ..! முடிவுக்காக காத்திருக்கும் மகா சங்கத்தினர்
இந்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக என்னைக் களமிறங்குமாறு முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பில் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“அதிபர்த் தேர்தலில் களமிறங்குமாறு பல தரப்பினரும் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகா சங்கத்தினர்
சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், அதேபோல் மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத்தலைவர்கள் ஆகியோரும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் சிந்தித்து, நன்கு ஆராய்ந்து அடுத்த சில வாரங்களில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளேன்.
எமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
எனவே, கட்சியைப் பார்த்து வாக்களிப்பதைவிட, நபர்கள் மற்றும் கொள்கைகளுக்கு முன்னுரிமையளித்தே இனி வாக்களிப்பார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |