ஜூன் மாதம் தேர்தல்..! ரணிலின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்
அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதித்தீர்மானம் எடுக்கவில்லை என தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது முதலில் பொதுத் தேர்தலை நடத்துவது நாட்டுக்கு நன்மை பயக்கும் என பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் மாதம் தேர்தல்
எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் சமகால அரசியல் நிலைமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் அனுபவத்தின் பிரகாரம் தற்போது பொதுத் தேர்தல் ஒன்று நாட்டுக்கு சாதகமானதாக அமையும். இல்லையேல் பாதகமான சூழ்நிலை உருவாகலாம் என பசில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் அதிபர்த் தேர்தலை நடத்துவதில் ரணில் விக்ரமசிங்க தீவிரமாக உள்ளார்.
அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |