தயாசிறி ஜயசேகர எடுக்கப்போகும் அரசியல் முடிவு
எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்காக தமக்கு பல கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்துள்ள போதிலும், இதுவரை எவரிடமும் அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை என சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை வலுவாக வழிநடத்தக்கூடிய குழுவுடன் இணைந்து பயணிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்னும் சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், தாம் இன்னும் சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருப்பதால், கட்சி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு
பொருளாதார மரணப் படுக்கைகளை விற்று மக்கள் மீது வரி விதித்து அதிபர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஜயசேகர தெரிவித்தார்.
நாடு வங்குரோத்து நிலையில் இருந்தபோது, அரசியலில் ஈடுபடாதவர்களை மக்கள் எதிர்வரும் அதிபர் தேர்தலில் பயன்படுத்த மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |