தையிட்டி விடயத்தில் பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடும் அநுர அரசு

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka
By Raghav Apr 24, 2025 04:07 AM GMT
Report

தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (23.04.2025) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் இனி இனவாதமும் மதவாதமும் இல்லை" எனக் கூறும் தற்போதைய ஜனாதிபதி தையிட்டியில் பேரினவாத மேலாதிக்க மனப்பான்மையுடனும் ஆக்கிரமிப்பு சிந்தனையுடனும் சட்டத்துக்கு விரோதமாக மக்கள் காணிகளில் கட்டப்பட்டுள்ள கட்டட பிரச்சினையை பேரினவாத பிக்குகளின் கைகளில் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் காலடியில் விழவைப்பதற்கு நினைப்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த இரண்டு வருட காலமாக போராடும் அரசியல் சக்திகளை அகற்றிட திட்டமிடுவதும் இனவாதமே.

டேன் பிரியசாத் படுகொலை : பின்னணியில் கஞ்சிபானை இம்ரானா?

டேன் பிரியசாத் படுகொலை : பின்னணியில் கஞ்சிபானை இம்ரானா?

உள்ளூராட்சி மன்ற தேர்தல்

தையிட்டியில் எழுந்துள்ள மக்களின் பிரச்சினை பேரினவாத அரசியலில் ஆணிவேரினால் தோற்றுவிக்கப்பட்டதே.

தையிட்டி விடயத்தில் பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடும் அநுர அரசு | Political Group In Tahiti Publicly Threatens Kill

அதனை மூடி மறைத்து அரசியல் பேசும் தற்போதைய ஜனாதிபதி, பண்டாரநாயக்க, ஜெயவர்தன, சந்திரிகா, ராஜபக்ச வழியில் வந்த தமிழர்களுக்கு எதிரான அரசியல்வாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனலாம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அண்மித்து கொண்டிருக்கையில் கண்டி தலதா மாளிகையில் வைக்கப்படுள்ள புனித தந்தத்தினை பௌத்த மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தி அரசியல் செய்யும் ஜனாதிபதி வடக்கில் தையிட்டியில் அரசியல் நீதிக்காக போராடுபவர்களை குறுகிய அரசியல் நோக்கமும் கொண்ட அரசியல்வாதிகள் என அடையாளப்படுத்தி குறிப்பாக தெற்கின் மக்களுக்கு அவர்களை இனவாதிகள், மதவாதிகள் என காட்ட நினைப்பது அரசியல் வஞ்சக நோக்கத்துடனாகும்.

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு

முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படுகொலை

தமிழர்களின் குரலாக கொழும்பு தலைநகரில் ஓங்கி குரல் கொடுத்த குமார் பொன்னம்பலம் அவர்கள் பட்டப்பகலில் கொழும்பு நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

அதற்கான நீதி இன்னும் கிட்டவில்லை. அதே அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்டும் என்பதற்கான எந்த விதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும்.

தையிட்டி விடயத்தில் பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடும் அநுர அரசு | Political Group In Tahiti Publicly Threatens Kill

தையிட்டி சட்ட விரோத கட்டடத்துக்கு எதிராகவும் நில மீட்புக்காகவும் கடந்த இரண்டு வருட காலமாக போராடுபவர்களை கடந்த காலங்களில் காவல்துறையினர் அச்சுறுத்தி அடாவடித்தனம் புரிந்ததோடு, விசாரணை என காவல் நிலையங்களுக்கும் அழைத்ததுடன் நின்றுவிடாது நீதிமன்றத்திலும் நிறுத்தி போராட்டத்தை தொடருவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர்.

எனினும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிரான உச்சக்கட்ட தொனியாகவே ஜனாதிபதியின் கூற்று அமைந்துள்ளது.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படுகொலையோடு தமிழர் தாயக அரசியல் அழிந்து ஒழிந்துவிட்டது என நினைக்கும் பேரினவாதிகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் பேரினவாதத்துக்கு எதிராக நடக்கும் அரசியல் போராட்டங்களும் நீண்ட நாட்களாக தொடரும் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை முழுமையாக அடக்கி ஒடுக்குவதற்கு தையிட்டி போராட்டத்தில் தெரியும் அரசியல் தலைமைத்துவத்தையும், அது நாடாளுமன்றத்தில் எழுப்பும் குரலையும் பயங்கரவாத குரலாக சித்திரிக்க எடுக்கும் முயற்சிக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நன்கு பாடம் புகட்ட வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

தேசிய மக்கள் சக்தி

தமிழர்களின் அரசியலை அழிக்க பல்வேறு வடிவங்களில் இன அழிப்பை தொடர்ந்து இறுதியில் இனப்படுகொலை புரிந்தவர்கள் தொடர்ந்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க படை தளங்களை விரிவாக்கி பலப்படுத்தியவர்கள் இறுதியில் தமது ஆக்கிரமிப்பு நோக்கத்தினை நிறைவேற்ற படையினரின் பாதுகாப்போடு பௌத்த சிங்கள அடையாளங்களை விதைக்கத் தொடங்கிவிட்டனர்.

தையிட்டி விடயத்தில் பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடும் அநுர அரசு | Political Group In Tahiti Publicly Threatens Kill

இது விடயங்களில் கடந்த காலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகாரம் அளித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது தேசிய மக்கள் சக்தி முகத்தோடு வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியலை அழித்திடும் அரசியலை வேகப்படுத்திட முகாம் அமைத்து அரசியல் யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் தமது அரசியலுக்கு எதிரானவர்கள் என நினைப்பவர்களை அடக்குவதற்கு இனவாத சாயம் பூச முற்படுவதோடு இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தையும் பாவிக்க தயங்க மாட்டார்கள். இதன் மூலம் தமிழர்களை அரசியல் நீக்கம் செய்வதே இவர்களது நோக்கம் எனலாம்.

நீண்ட கால இன அழிப்புக்கும், இறுதி இனப்படுகொலைக்கும், நில ஆக்கிரமிப்புக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கும், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்வதற்கும், பேரினவாத மதவாதிகள் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் காரணமாக இருந்தவர்கள் தற்போது மேடை அமைத்து நீலிக்கண்ணீர் வடித்து எங்களுக்கு வாக்களித்தால் உங்களின் கண்ணீரை துடைப்போம் என்று கூறுவது மீண்டும் மீண்டும் தமிழர்களை அழிவுக்குள் தள்ளுவதற்கே.

எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முதலை கண்ணீர் வடிப்பவர்களையும், தனது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் துரோகம் செய்பவர்களையும், அற்ப சலுகைகளுக்காக மறைமுகமாக தமிழர்களின் தேசியத்துக்கு எதிராகவும் செயல்படும் அரசியல் துரோகிகளையும் அடையாளம் கண்டு துடைத்தெறிந்து தமிழர் நிலம் காக்கவும் தேசியம் காக்கவும் துணிச்சலோடு குரல் எழுப்புவோர்க்கு எமது வாக்கு பலத்தை வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். தேசத்தின் ஒற்றுமையே தேசியத்தின் வலிமை என்பதை நினைவில் கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

யாழில் சர்ச்சையை கிளப்பிய யூரியூபர் கிருஷ்ணா: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் சர்ச்சையை கிளப்பிய யூரியூபர் கிருஷ்ணா: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தலைவரை தன்னுடன் சண்டைக்கு வரும்படி அழைத்த கருணா : அம்பலமான உண்மைகள்

தலைவரை தன்னுடன் சண்டைக்கு வரும்படி அழைத்த கருணா : அம்பலமான உண்மைகள்

உலகை உலுக்கிய காஷ்மீர் தாக்குதல் : கதறும் மக்களின் வைரல் காணொளி

உலகை உலுக்கிய காஷ்மீர் தாக்குதல் : கதறும் மக்களின் வைரல் காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016