சம்பந்தன் எறியும் தற்பாதுகாப்பு ஆயுதம்

TNA Mahinda Rajapaksa Rajavarothiam Sampanthan Ranil Wickremesinghe Sonnalum Kuttram
By Vanan Jun 13, 2023 05:43 AM GMT
Report

இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுக்களின் போது, வழக்கத்துக்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது 90 ஆவது வயதில் அசாதாரணமாக சீற்றமடைந்தமை உற்று நோக்கப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை கையாளும் விடயத்தில் பொறுமையை இழந்து விட்டோம், தொடர்ந்தும் ஏமாறத் தயார் இல்லை என இரா. சம்பந்தன் சீற்றப்பட்டபோதும், அதேபோல உள்ளூரில் இதற்குரிய தீர்வை சிறிலங்கா அரசாங்கம் வழங்கத் தவறினால் அனைத்துலக சுயநிர்ணய சட்டத்தின் கீழ் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் ஒரு துருப்புச்சீட்டை அடித்த போதும், ரணில் விக்ரமசிங்க அதற்குரிய எதிர் வினைகளை முறையாக வெளிப்படுத்தவில்லை.

மாறாக அடுத்த மாதம்(ஜூலை) இறுதிக்குள் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி முக்கியமான விடயங்களுக்கு தீர்வைக் காண்போம் என அவர் பதில் வழங்கியிருக்கிறார்.

அதற்கு பின்னரும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் முன்னேற்றங்கள் இல்லாவிட்டால் தன்னை குறை கூறிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன், சிறிலங்கா படைத்தரப்பிடம் சிக்கியுள்ள காணிகளை தமிழ் மக்களுக்கு மீண்டும் வழங்கும் வகையில் சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் ஒருவர் தலைமையில் அமைக்கப்படும் பணிமனை ஒன்றுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகனை இணைப்பாளர் என்ற பொறுப்பில் அமர்த்திவிட்டால், பிரச்சினைகள் தீர்ந்து விடுமே என்ற கருத்தையும் அவர் பூடகமாக (கடந்த வாரம் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுடனான பேச்சின் போது) வெளிப்படுத்திக் கொண்டதான செய்திகள் கசிந்துள்ளன.

மூக்கில் வியர்வை 

சம்பந்தன் எறியும் தற்பாதுகாப்பு ஆயுதம் | Political Issue For The Tamil People Sri Lanka

இதற்கிடையே, தமிழ் மக்களுக்கான தீர்வை சிறிலங்கா வழங்கத் தவறினால் அனைத்துலக சுயநிர்ணய சட்டமன்றத்தின் விடயத்தை இரா சம்பந்தன் தொட்டதும் ராஜபக்ச அதிகார மையத்திற்கு மூக்கில் வியர்வை வருகின்றது.

இதனால் தான் தமிழ் கட்சிகள் அனைத்துலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் நாட்டை குழப்பிக் கொள்ளாமல், உள்நாட்டில் அரசுக்கு நிபந்தனைகளை விதிக்காமல் பேச்சுகளை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென மஹிந்த ராஜபக்ச கூறுகிறார்.

ரணில் விக்ரமசிங்க என்று சிறிலங்காவின் முதன்மை தலையாடியாக இருப்பது போல, நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்துடன் இல்லாமல் அதில் பெரும்பான்மை பலத்துடன் இரண்டு தடவைக்கு கொலுவிருந்தவர் மஹிந்த ராஜபக்ச.

அவ்வாறாக சிறிலங்காவின் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் 18 சுற்று பேச்சுகளை நடத்தினாலும் இறுதியில் தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதே மஹிந்த ராஜபக்ச தான் இப்போது அனைத்துலக நியமங்களின் படி தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரித்துக்கோரும் உரிமை இருப்பதாக பேசுபொருள் ஒன்று வந்தவுடன், தமிழர்கள் அனைத்துலக நிகழ்ச்சி நிரலில் நாட்டை குழப்புவதான விமர்சனத்தை முன்வைத்து சிங்கள மகா ஜனதாவுக்கும் ஒரு மறைமுகமான செய்தியை எறிய தலைப்படுகின்றார்.

ஆக மொத்தம், ராஜபக்சர்கள் இந்த மூக்கு வியர்வைக்கு மத்தியில் கடந்த மே தின உரையில் இந்த வருடத்தின் இறுதிக்குள் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படும் என தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க இப்போது அதனை இன்னும் முன்னகர்த்த தலைப்படுவதாக தெரிகின்றது.

தற்பாதுகாப்பு ஆயுதம்

சம்பந்தன் எறியும் தற்பாதுகாப்பு ஆயுதம் | Political Issue For The Tamil People Sri Lanka

இதனால் தான் அவர் அடுத்த மாத இறுதிக்குள் சில விடயங்களில் தீர்வைக் காண்போம் என கூறத் தலைப்படுகின்றார்.

இதற்கிடையே ரணில் விக்ரமசிங்கவின் நெற்றிக்கு நேரே இரா.சம்பந்தன் சீற்றத்தை வெளிப்படுத்தியதான நகர்வு கூட, சில உள்ளக சிக்கல்களுக்குரிய தற்பாதுகாப்பு ஆயுதமாகவும் நோக்கப்படக்கூடும்.

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டமை யாதார்த்தம். எதிர்வரும் தேர்தலில் தமிழரசுக் கட்சி கடுமையாக உரசப்படலாம் என்ற ஊகங்கள் உள்ளன.

இதற்கிடையே, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மையப்படுத்திய சிறிலங்காவின் நகர்வுகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு சில ஆதாயங்களை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் இரா. சம்பந்தன் தனது தற்காப்பு ஆயுதத்தை தொடுவதாக நோக்கப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026