ரணிலின் ஆசீர்வாதத்துடன் சஜித் உருவாக்கப்போகும் அரசியல் சக்தி
ஐக்கிய தேசியக் கட்சி இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முழுப் பொறுப்பும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கருத்து வெளியிடுகையில்,
“ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எமது கட்சியின் முழுப் பொறுப்பையும் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நிர்வாகக் குழு ஒப்படைத்துள்ளது.
மறு இணைப்பு
இரு கட்சிகளுக்கும் இடையிலான மறு இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது நேர்மறையான கட்டத்தில் இருக்கிறது.

சஜித் பிரேமதாசவின் தலைமையிலும், ரணில் விக்ரமசிங்கவின் ஆசீர்வாதத்துடனும், ஒரு பெரிய சக்தி உருவாக்கப்படும்.
அந்த சக்தி நாட்டில் ஒரு தீர்க்கமான அரசியல் சக்தியாக மாறும்” என்றும் ஹர்ஷன ராஜகருணா மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |