தமிழ் - சிங்கள மக்களை பிரிக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகள் : மகாநாயக்க தேரர்கள் குற்றச்சாட்டு!
வடக்கில் உள்ள தமிழ் மக்களும் கிழக்கில் உள்ள சிங்கள மக்களும் இன-மத பேதமின்றி ஒற்றுமையாக செயல்படுவது, தமது அரசியல் பயணத்துக்கு தடையாக இருக்குமென சிந்திக்கும் சில அரசியல்வாதிகள், மக்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிப்பதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அரசியல்வாதிகளை புறக்கணிக்க வேண்டிய காலம் தற்போது வந்துள்ளதாக உலக தமிழர் பேரவையுடனான சந்திப்பின் போது, அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நேற்றைய தினம் பயணம் செய்த உலக தமிழர் பேரவையினர், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்த நிலையில், இன்று அமரபுர, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளனர்.
ஒற்றுமையை விரும்பாத அரசியல்வாதிகள்
இதன் போது, இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் இன மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்வதாகவும் இதனை சில அரசியல்வாதிகள் விரும்புவதில்லை எனவும் திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பிளவுபடுத்துவது உலக தமிழர் பேரவையின் நோக்கமல்ல : சுரேன் சுரேந்திரன் எடுத்துரைப்பு (படங்கள்)
இதனை, இலங்கையர்கள் அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் அரசியல் நலனுக்காக வடக்கில் உள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் மக்களை தவறான பாதையில் வழிநடத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |