பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து ரணில் விடுத்துள்ள பணிப்புரை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று(08) முற்பகல் அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
விவசாய நவீனமயமாக்கல்
“பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பள அளவு குறித்து எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அறியப்படுத்தப்பட வேண்டும்.” என்றார்.
இந்த முறை பாதீட்டு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு அமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிக்கின்றன என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |