இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன் கவிஞர் ரெஃபாத் அலரீர்
பாலஸ்தீன் கவிஞர் ரெஃபாத் அலரீர், காசாவில் உள்ள இளம் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், நேற்று இரவு இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
"எனது இதயம் உடைந்துவிட்டது, எனது நண்பரும் சக ஊழியருமான ரெஃபாத் அலரீர் சில நிமிடங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினருடன் கொல்லப்பட்டார்" என்று அவரது நண்பரான கவிஞர் மொசாப் அபு தோஹா தனது முகநுல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இராணுவ நடவடிக்கை
இஸ்ரேலிய அதிகாரிகளில் வெளியிட்ட தகவலின் படி, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காஸாவில் ஒரு பரந்த இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் பொதுமக்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹமாசின் கீழ் இயங்கும் சுகாதார அமைச்சு, 17,100 க்கும் அதிகமானோர், பெரும்பாலும் பொதுமக்கள், இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் மாதம் அலரீர் தனது எக்ஸ் பக்கத்தில், "நான் இறந்தால்" என்ற தலைப்பில் ஒரு கவிதையை வெளியிட்டிருந்தார்.
அது பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டது. அதில் அவர், "நான் இறக்க வேண்டும் என்றால், அது நம்பிக்கையைத் தரட்டும், அது ஒரு கதையாக இருக்கட்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
If I must die, let it be a tale. #FreePalestine #Gaza pic.twitter.com/ODPx3TiH1a
— Refaat in Gaza 🇵🇸 (@itranslate123) November 1, 2023
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |