நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 அரசியல்வாதிகள்! எடுக்கப்படவுள்ள மாற்று நடவடிக்கை
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய அரசியல்வாதிகளின் நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
அமைச்சர்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 60 பேர் குறித்த பட்டியலில் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
குறித்த அரசியல்வாதிகள் செலுத்த தவறிய குடிநீர் கட்டணங்களின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
எடுக்கப்படவுள்ள மாற்று நடவடிக்கை
கட்டணங்களை செலுத்தத் தவறிய ஓய்வுபெற்ற அமைச்சர்களின் ஓய்வூதியத்தில் இருந்து செலுத்த வேண்டிய தொகையை மீட்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரச நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கட்டணத்தை செலுத்த தவறிய அரசியல்வாதிகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

