யாழ். பல்கலையில் இடம்பெற்ற 25வது ஆண்டு பொங்குதமிழ் நினைவேந்தல்
Tamils
University of Jaffna
Sri Lankan Peoples
By Kajinthan
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் இன்று (17) இந்த நிகழ்வு நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் இணைந்து இந்த நிகழ்வை முன்னெடுத்திருந்தனர்.
பொங்குதமிழ் பிரகடனம்
இந்த நிகழ்வின் போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்