மறைந்த பாப்பரசர் 16 ஆம் பெனடிக்டின் உடல் நல்லடக்கம் - 220 ஆண்டுகளில் இல்லாத வகையில் இறுதி நிகழ்வு
மறைந்த முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்டின் உடல், பல்லாயிரக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலியுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரின் இறுதி நிகழ்வுகள் பரிசுத்தப் பாப்பரசர் பிரான்ஸ்சிஸ் தலைமையில் இன்று வத்திக்கானில் இடம்பெற்றிருந்தது.
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக் குறைவு காரணமாக புத்தாண்டு தினத்தன்று தனது 95 ஆவது வயதில் இயற்கை எய்தியிருந்தார்.
உடலுக்கு அஞ்சலி
கடந்த மூன்று நாட்களில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மறைந்த முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்டின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 220 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக தனக்கு முன்னர் பரிசுத்தப் பாப்பரசர் பொறுப்பில் இருந்த ஒருவருக்கு பரிசுத்தப் பாப்பரசர் ஒருவர் இறுதி நிகழ்வை நடத்தியுள்ளார்.
இறுதி நிகழ்வுகள்
இன்று புனித பேதுரு பெசிலிக்காவிற்கு முன்னால் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் அவருக்கான இறுதி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் முன்னாள் பரிசுத்தப் பாப்பரசரின் இறுதி நிகழ்வில் பங்கேற்றிருந்த மக்கள், கரவொலிகளை எழுப்பியதுடன், அன்னாரது உடல் பெசிலிக்காவில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
தமது இறுதி நிகழ்வு எளிமையாக நடத்துமாறு முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் கேட்டுக்கொண்டிருந்த போதிலும் உலகம் முழுவதிலும் இருந்து சென்றிருந்த கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரின் இறுதி நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
