எனது கல்லறைக்கான இடம் இது தான்! வத்திக்கானை மறுக்கும் போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ், ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் தன்னுடைய உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என நேற்றைய (13) பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
87 வயதுடைய போப் பிரான்சிஸ் அவருடைய கல்லறையை தெரிவு செய்திருக்கிறார். ஆனால் அது, இதற்கு முன் போப் பதவி வகித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா அல்ல.
இதனால், நூறாண்டுகளுக்கு பின் வத்திக்கான் நகருக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப் இவராவார்.
சான்டா மரியா மேகியோர் பசிலிக்கா
கடந்த 1903ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ் தவிர்த்து வேறிடத்தில் அடக்கம் செய்யப்பட்டவராக போப் லியோ 8 விளங்கினார். அவருடைய உடல் ரோமில் உள்ள செயின்ட் ஜான் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
போப் ஆவதற்கு முன்பு, ரோம் நகருக்கு பிரான்சிஸ் செல்லும்போது, ஒரு ஞாயிற்றுக்கிழமை தினத்தில் சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவுக்கு செல்வது வழக்கம்.
2013ஆம் ஆண்டு போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், அறுவை சிகிச்சை செய்த பின்பும் அவர் ரோமிற்கு சென்று பசிலிக்காவில் வழிபட்டிருக்கிறார்.
இதற்கு முன் வத்திக்கானில் உள்ள பசிலிக்காவில் 7 போப்புகள் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என வாடிகனின் அதிகாரபூர்வ ஊடக தகவல் தெரிவிக்கின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |