யாழில் ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் இன்று (14) கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு எனும் தலைப்பில் சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பின்வரும் ஐந்தம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2024 பாதீட்டில் போதிய ஒதுக்கீடு
1. வரைவு கடற்றொழில் சட்டத்தை நிராகரிக்கின்றோம்
2. இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு கடற்றொழில் கப்பல்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதை முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம்.
3. கடல் உணவு இறக்குமதியால் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கடல் உணவு இறக்குமதியை எதிர்க்கின்றோம்.
4. கடற்றொழில் சமூகத்திற்கு 2024 இற்கான பாதீட்டில் போதிய ஒதுக்கீடு இன்மையையும் பொருத்தமற்ற அரச கொள்கைகளையும் மாற்றியமைத்து கடற்றொழில் வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும்.
5. கடந்த பல வருடங்களாக இந்திய இழுவைமடி படகுகளால் பாதிக்கப்பட்டுவரும் வட-இலங்கை கடற்றொழில் சமூகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை முன்னெடுக்குமாறு கூறுகின்றோம்.
மகஜர் கையளிப்பு
கடந்த பல வருடங்களாக பாரிய பொருளாதார நெருக்கடி, மற்றும் கொவிட் -19 நெருக்கடி ஆகியன கடற்றொழில் சமூகத்தை பெரிதும் பாதித்துள்ளது.
இவ்வாறான துயர் மத்தியில் வாழும் கடற்றொழில் சமூகத்தை மேலும் பாதிக்கும் அரச கொள்கைகளை மாற்றி எமது சமூகத்திற்கு விடிவு வழங்குமாறு கேட்டு இம்மகஜரை கையளிக்கின்றோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |