பாரதிராஜா திரைப்படங்களை நினைவூட்டும் போராட்டம் திரைப்பட இசையும் பாடல்களும்
‘போராட்டம்’ திரைப்படத்தின் நாயகன் - நாயகி சந்திக்கும் காட்சிகளில் இடம்பெறும் இசையமைப்பு, இயக்குநர் பாரதிராஜாவின் திரைப்படங்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நாயகன் மற்றும் நாயகி சந்திக்கும் தருணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இசை, காட்சிகளின் காதல் உணர்வை அழகாக வெளிப்படுத்துவதாகவும், பாரதிராஜா திரைப்படங்களில் காணப்படும் இயல்பான காதல் உணர்வையும் மென்மையான இசை அனுபவத்தையும் நினைவூட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய காட்சிகளுக்கு இசையமைப்பாளர் வழங்கியுள்ள முக்கியத்துவம் திரைப்படத்தின் உணர்வோட்டத்திற்கு வலுசேர்ப்பதாகவும், காட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் வகையில் இசை அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான இசையமைப்பு காட்சிகளை வெறுமனே நகர்த்திச் செல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர்கள் பாராட்டியுள்ளனர், இலங்கைத் தமிழ் சினிமாவில் உருவாகிவரும் புதிய திரைப்பட முயற்சிகளுக்கு ‘போராட்டம்’ திரைப்படம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறக்கூடியதாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, காட்சிகளில் இசைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் திரைப்படத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக தமக்குத் தோன்றியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கருத்து - ம.வேல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |