துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி தொடர்பில் வெளியான தகவல்
ஜனவரி 1ஆம் திகதி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான பெறுமதிசேர் வரி நடைமுறைப்படுத்தப்படுவதிலிருந்து துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா இன்று(28) தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,
“எரிபொருளுக்கான 18 சதவீத பெறுமதி சேர் வரியை நடைமுறைப்படுத்தப்படும் போது, அந்த வரியில் இருந்து 7.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்.
பெறுமதி சேர் வரி
அத்துடன், எரிவாயுக்கான 18 சதவீத பெறுமதி சேர் வரியை நடைமுறைப்படுத்தப்படும் போது, தற்போதுள்ள 2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்.
மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்ட பின்னரும் விலை 18 வீதத்தினால் அதிகரிக்கப்படாது.
அதிகபட்ச விலை நிர்ணயம்
பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்படுவதால், அதற்குரிய வரி குறைப்பு உயர்வை மாற்றி விலை நிர்ணயிக்கப்படும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |