முடிந்தால் மக்கள் கஷ்டங்களை மக்களோடு நின்று அறியுங்கள் - கோட்டாபயவிற்கு பகிரங்க சவால்
முடிந்தால், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றிற்காக மக்கள் நிற்கும் வரிசைகளில் நின்று அவர்களின் கஷ்டங்களை கேட்டு அறியுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
சிறிலங்கா அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச மக்கள் நிற்கும் வரிசைகளிற்கு சென்று அவர்களின் படும் கஷ்டங்களை கேடடால் மக்கள் எவ்வாறு பதில் அளிப்பார்கள் என்பதை காணலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடாமல் தினமும் செய்திகளில் விலைகளை அதிகரிக்கும் கட்டுப்பாடு இல்லாத நிலையை நான் இதுவரை இலங்கை அரச வரலாற்றில் அறிந்ததில்லை.
அரச தலைவர் பல நிறுவங்களிற்கு மேற்பார்வை செய்வதை நாம் அறிந்தோம், அது நல்லதே. இருப்பினும் நாட்டில் ஏற்ப்பட்டுள்ள முக்கியமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சம்மந்தப்படட நிறுவனங்களுடன் கலந்துரையாடுவாரா என்பது சந்தேகமே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
