எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்! முல்லைத்தீவில் தபால் மூலம் ரணிலிடம் கோரிக்கை
நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள் எனும் தொனிப்பொருளின் கீழ் வடமாகாண ரீதியாக முப்படைகள் வசம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் அட்டை மூலம் சிறிலங்கா அதிபருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது நேற்று (07) மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தி குறித்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐயாயிரம் தபால் அட்டைகள்
இந்தநிலையில் காணிக்கு செந்தகாரரான மக்கள், காணிகள் இன்றி வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர், இதன் அடிப்படையில் மக்களின் காணிகளில் குடியிருக்கும் இராணுவத்தினர் காணிகளை மக்களுக்காக விடுவித்து வழங்க வேண்டும்.
இதன் அடிப்படையிலேயே அதிபரின் காரியாலயத்திற்கு ஐயாயிரம் தபால் அட்டைகளை அனுப்பி வைக்கும் முகமாக குறித்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்வேறு காணிகளை சேர்ந்த மக்களை இணைத்து சிறிலங்கா அதிபருக்கு தபால் அட்டையை அனுப்பும் நடவடிக்கை நேற்று (07) இடம்பெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற முக்கியமாக கேப்பாப்புலவு வட்டுவாகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமது காணிகள் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் உள்ள மக்களை இணைத்து இவர்களூடாக குறித்த தபால் அட்டைகளை அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (07) இடம்பெற்றது.
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முன்னதாக காணி உரிமையாளர்கள் மெசிடோ நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சூழலியல் மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினுடைய பிரதிநிதிகள் காணியை இழந்த மக்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து தபால் அட்டைகளை பூர்த்தி செய்த மக்கள் முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று அங்கு தபால் அட்டைகளை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |