முல்லைத்தீவிலும் சுமுகமாக இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு
ஜனாதிபதித் தேர்தலிற்கான தபால் மூலமான வாக்களிப்புக்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் தங்களது வாக்குகளை அளித்துள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் அலுவலகம், விசேட அதிரடிப்படை முகாம் மற்றும் மாவட்டத்தின் நட்டாங்கண்டன்டல், மல்லாவி, ஐயன்கன்குளம், மாங்குளம், ஒட்டுசுட்டான் (Oddusuddan), புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) ,முள்ளியவளை (Mulliyawalai) , முல்லைத்தீவு, கொக்கிளாய், வெலிஓயா ஆகிய பத்து காவல் நிலையங்கள் என பதின்மூன்று வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று (04) தமது தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தபால் மூலமான வாக்களிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3566 பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக தகுதிபெற்ருள்ள நிலையில், தபால் மூலமான வாக்களிப்புக்கள் இன்று 04ம் திகதி முதல் 06ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மேலும், மாவட்டச் செயலகம், தேர்தல்கள் ஆணைக்குழு, காவல்துறையினர் தமது தபால் மூல வாக்குகளை வாக்களிக்க விசேட தினமாக இன்று ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |