கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் இறுதியில் வெளியான நற்செய்தி
கடவுச்சீட்டு அச்சிடும் நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் சுமார் 750,000 கடவுச்சீட்டுக்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
புதிய கடவுச்சீட்டு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புதிய கடவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதில் தற்செயல் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) குற்றம் சுமத்தியுள்ளார்.
கால அவகாசம்
இந்த நிலையில், அமைச்சரவையுடனான கலந்துரையாடலின் பின்னர், தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக குறைந்தது 750,000 சாதாரண கடவுச்சீட்டுகளை அச்சிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு அச்சடிக்கும் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதனால்தான் இந்த தாமதத்தை எதிர்கொள்கின்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது வரையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நிலைமையை நிர்வகித்து வருகிறதாகவும் ஒரு மாதத்திற்குள் சாதாரண கடவுச்சீட்டுகளை வழங்குமாறு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |