தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் தெரிவு ஒத்திவைப்பு

TNA R. Sampanthan S. Sritharan Selvam Adaikkalanathan ITAK
By Sathangani Jul 11, 2024 04:39 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பெயரில் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) நாடாளுமன்றக் குழுவின் புதிய தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய தலைவர் தொடர்பான கூட்டம் நேற்று (10) நடைபெற்ற போதும் தெரிவு இடம்பெறாமல் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைத் தமிழரசு கட்சி, கட்சி ரீதியாக ஒன்று கூடி ஆராய்ந்து ஒரு முடிவெடுத்த பின்னர், இது பற்றித் தீர்மானிப்பதாக நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல்: நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ள விவாதம்

இலங்கை அதிபர் தேர்தல்: நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ள விவாதம்

சம்பந்தன் மறைவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இதுவரை காலமும் இருந்த இரா.சம்பந்தன் (R.Sampanthan) காலமானதை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகியுள்ளது.

இதேவேளை குறித்த பதவிக்கு தம்மைத் தெரிவு செய்யும்படி கோரி ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) வலியுறுத்தி வந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் தெரிவு ஒத்திவைப்பு | Postponed Tna Parliamentary Cmte Chairman Select

இந்த நிலையில், நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்ற போது தர்மலிங்கம் சித்தார்த்தனைத் (Siddharthan) தவிர ஏனையோர் பிரசன்னமாகி இருந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் மேற்படி தலைமைப் பதவிக்குத் தன்னுடைய பெயரை செல்வம் அடைக்கலநாதன் தாமே பிரேரித்தார்.

அது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிறீதரன் (Shritharan) ஆரம்பத்தில் வெளியிட்ட கருத்தினையே தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வழிமொழிந்தனர் எனத் தெரியவந்தது.

''செல்வம் தலைவராக இருப்பதில் ஆட்சேபனை ஏதுமில்லை. அவர் தலைவராக இருக்க, இதுவரை காலமும் இந்த பணியை சம்பந்தன் சார்பில் ஆற்றி வந்த சுமந்திரனே (M. A. Sumanthiran) அவற்றைத் தொடர்ந்து செய்யலாம்.

கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம்: வடிவேல் சுரேஷ் சூளுரை

கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம்: வடிவேல் சுரேஷ் சூளுரை

கட்சி ரீதியாக முடிவெடுத்தல்  

இருவரும் இணைந்து இந்தப் பணியை முன்னெடுக்க முடியும். முன்னெடுக்க வேண்டும். ஆயினும், செல்வமும் ஏனையோரும் இப்போது ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி என்ற ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கி அதில் செயற்படுகின்றனர் என அறிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் அதில் இருந்து கொண்டு இங்கு தமிழரசு கட்சியின் பெயரில் இருக்கும் நாடாளுமன்ற குழுவுக்கு தலைமை தாங்க முடியாது. கூட்டமைப்பில் இருந்து கொண்டு தலைமை தாங்குவது வேறு. வேறு ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இதற்குத் தலைமை தாங்குவது வேறு.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் தெரிவு ஒத்திவைப்பு | Postponed Tna Parliamentary Cmte Chairman Select

அவ்வாறு அவர்கள் தலைமை தாங்குவதனால் அது குறித்து தமிழரசுக் கட்சியில் கட்சி ரீதியாக நாங்கள் சில விடயங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்'' என சிறீதரன் தெளிவாக வலியுறுத்தினார்.

இந்த நிலையில், சுமந்திரனும் அக்கட்சியின் ஏனையோரும் அதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். கூட்டமைப்பின் பெயரில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பை இணைத்துக் கொள்வதில் சிறீதரன் கடுமையான ஆட்சேபனைகளை நேற்றைய கலந்துரையாடலில் அடிக்கடி வெளிப்படுத்தினார்.

தங்களுடைய ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியை கைவிட்டு வர முடியாது, அதன் பெயரிலேயே செயற்படுவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை செல்வம் தரப்பினர் வெளிப்படுத்தியமையால் தலைவர் தெரிவு முடிவெடுக்கப்படாமல் தள்ளிப் போயுள்ளது.

இறுதியில் தமிழரசுக் கட்சி, கட்சி ரீதியாக கூடி இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுத்து அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய தேசியக் கட்சியை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சக்தி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026