கிழக்கு மாகாண அதிபர் நியமனம் குறித்து வெளியான தகவல்
Eastern Province
By Beulah
இலங்கை அதிபர் சேவை தரம் 3க்கு நியமனம் பெற்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 486 புதிய அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருந்த இந்த நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் 4ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருந்தது.
எதிர்வரும் 6 ஆம் திகதி
தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த நிகழ்வு எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை அதே இடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்