தேர்தல் ஒத்திவைப்பு -அதிபர் ரணிலுக்கு பௌத்த பீடத்திலிருந்து சென்ற காட்டமான கடிதம்
Ranil Wickremesinghe
Local government Election
By Sumithiran
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் இராஜதந்திரத்திற்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதமின்றி நடத்துமாறு புத்தசாசன செயலணி அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
வாக்கெடுப்பு நடத்தாதது சட்ட விரோதம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால், நிதிப் பற்றாக்குறையால் தேர்தல் நடத்தப்படவில்லை என்ற அரசின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை 15 ஆக மட்டுப்படுத்தி, அரச விழாக்களை நிறுத்தி, ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்தி, அமைச்சுக்களின் தேவையற்ற செலவுகளை நிறுத்தி தேர்தலுக்குத் தேவையான பணத்தை வழங்கவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்