நடு வீதியில் பள்ளம்: நொடியில் தப்பிய தந்தையும் மகளும் (காணொளி)
Sri Lanka
Sri Lankan Peoples
Water Board
By Dhilak
கொத்தடுவ வடிகாலமைப்புச் சபைக்கு அருகில் உள்ள வீதியில் , மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு மகளை தந்தையொருவர் அழைத்துச் சென்ற வேளை பாரிய குழிக்குள் விழுந்து அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று(19) காலை இடம்பெற்றுள்ளது.
காரணம்
கொத்தடுவ முதல் கொஸ்வத்தை வரையான வீதியில் நிலத்தடி குழாய் ஒன்று வெடித்ததன் காரணமாக சுமார் 16 அடி ஆழத்திற்கு இந்தப் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட குழிக்குள் தந்தையும் மகளும் வீழ்ந்து மீட்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற நிலையில் நிலத்தடி குழாய் அமைப்பு தோண்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் தந்தையும் மகளும் மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்ததையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து காப்பாற்றியுள்ளனர்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்