தமிழ் உணர்வோடு அசராது மூன்றாவது நாளாகவும் தொடரும் மாபெரும் பேரணி புல்மோட்டை நோக்கி!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்.
இன மத பேதம் கடந்து தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டம் தற்போது புல்மோட்டையை நெருங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மூன்றாம் திகதி அம்பாறை பொத்துவிலில் ஆரம்பமான இந்த போராட்டம், நேற்று இரவு திருகோணமலையில் நிறைவடைந்தது, இன்று காலை முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாயை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு உரிய தீர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மதத் தலைவர்கள், வடக்கு- கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனைர்.