கோழி இறைச்சி - முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்
அடுத்த இரண்டு வாரங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை குறைவினால் நுகர்வோர் பயனடைவார்கள் என அகில இலங்கை கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அகில இலங்கை கோழி பண்ணையாளர்கள் சங்கம் கலந்துரையாடியுள்ளது.
இதற்கமைய கால்நடை உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாகவே இந்தச் சலுகையை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சி மற்றும் முட்டை
மேலும் கூறுகையில்,“கால்நடை உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்தால் அது ஒரு கிலோ கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விற்பனை விலையை குறைக்க உதவும்.
இந்நிலையில் தேவையான சோள கையிருப்புகளை இறக்குமதி செய்வது மற்றும் கால்நடைகளுக்கு வருடாந்த நெல் அறுவடையில் அதிகப்படியான நெல்லை வழங்குவது குறித்து உடனடியாக முடிவெடுக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
இந்த முடிவு உற்பத்தி செலவைக் குறைக்க உதவும். தேவையான கால்நடை உணவுகள் குறைந்த விலையில் கிடைத்தால், அந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கும்.”என தெரிவித்துள்ளார்.