பொது மக்களுக்கு எச்சரிக்கை! எந்தநேரமும் மின் துண்டிக்கப்படலாம்
People
SriLanka
Kerawalapitiya
Power Cut
Kelani Tissa Sojidis
By Chanakyan
கெரவலப்பிட்டிய வெஸ்ட் கோஸ்ட் மின் உற்பத்தி நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றிரவு அந்த மின் உற்பத்தி நிலையத்தின் இயக்கங்கள் செயலிழந்தன.
அதேவேளை களனி திஸ்ஸ சோஜீடிஸ் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று நிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலைமையில் நாட்டின் சில பிரதேசங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படலாம் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் எரிபொருள் தொடர்பான பிரச்சினை காரணமாக அனல் மின் உற்பத்திகள் பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
அத்துடன் நீரேந்தும் பிரதேசங்களில் உள்ள நீர் தேக்கங்கள் வற்றியுள்ளதால், நீர் மின் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படலாம் என பேசப்பட்டு வருகிறது.
