கொழும்பில் மூன்று நாட்களாக தொடரும் பாரிய போராட்டம்! இன்று களமிறங்கபோகும் 10,000 ஊழியர்கள்
இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் ஊழியர்கள்
மின்சார சபையை விற்பனை செய்வது மற்றும் அதனை தனியார் மயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து, சபையின் ஊழியர்களால் நேற்றுமுன்தினம் பாரிய போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதில் மின்சார சபையின் ஊழியர்களும், அதனுடன் தொடர்புடைய ஆறு சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இரண்டாவது நாளான நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மின்சார சபையின் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததோடு, இன்று முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம் தொடர்பிலும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
நீர்த்தாரை பிரயோகம்
நேற்றைய தினம் பாரியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் காரணமாக மின்சார சபையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இதனால் குறித்த பகுதியில் பாதுகாப்பு கருதி அதிகளவான காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டிருந்ததோடு, நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் வரிசைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |