வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் இலங்கையர்கள்! முதலிடத்தில் உள்ள நாடு இது தான்..
இலங்கையில் இருந்து சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் இதுவரை புலம்பெயர்ந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது சவூதி அரேபியாவில் சுமார் 6 இலட்சம் இலங்கையர்கள் வசிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பிரித்தானியாவில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தமைக்கான காரணம்
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் காரணமாக பல தமிழர்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்வதற்காக நாட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.
அத்துடன், மேலும் சிலர் தங்களது வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேலைவாய்ப்பை தேடி வெளிநாடுகளுக்கு சென்ற நிலையில், சிலர் குறித்த நாடுகளிலேயே குடியுரிமையை பெற்று கொண்டனர்.
இந்த பின்னணியில், தற்போது இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி நிலை, புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் வரிகள், மக்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் காரணமாக நாட்டிலிருந்து வெளியோருவரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் குடியேறிய இலங்கையர்கள்
ஆபிரிக்க கண்டத்தின் லிபியா, மொரீஷியஸ், சீஷெல்ஸ், தென் ஆபிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் புலம்பெயர் இலங்யைர்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், இந்தியா, ஜப்பான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் அதிகளவான இலங்கையர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், கனடாவின் டொராண்டோ மற்றும் மாண்ட்ரீல் ஆகிய பகுதிகளில் அனைத்து இனத்தையும் சேர்ந்த இலங்கையர்கள் வசிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
புலம்பெயர் வருமானம்
பல்வேறு காரணங்களை முன்வைத்து இலங்கையை விட்டு வெளியேறிய நபர்கள், உலகின் பல பாகங்களிலும் தற்போது கல்வி மற்றும் தொழில்சார் நடவடிக்கைகளை முன்னெடுத்த வருகின்றனர்.
இதற்கமைய, 2009 ஆம் ஆண்டில் 3.3 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை புலம்பெயர் இலங்கையர்கள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் இந்த தொகை அதிகரிப்பதாகவும் இதன்படி, சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்து பாரியதொரு தொகையை வருமானமாக ஈட்டிக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |