மின்வெட்டு நேரத்தை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளிப்பு
sri lanka
ceb
power cut
By Vanan
இன்று முதல் மின்வெட்டு நேரத்தை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனினும் இது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியாது என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இருப்புக்களை பொறுத்தே மின்வெட்டை முழுமையாக தவிர்ப்பதா? அல்லது மின் தடை செய்யப்படும் நேரத்தை குறைப்பதா? என்பதை தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்று முதல் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக அரச தலைவரது ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
துறைசார் அதிகாரிகளுடன் அரச தலைவர் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்த இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி