மின்வெட்டு தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவி்ப்பு
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திப் பணிகள் இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட நாடளாவிய மின்சாரத் தடைச் சம்பவத்தைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் செயலிழந்தன.
இதனால் தேசிய மின் கட்டமைப்புக்கு மொத்தம் 810 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் தற்காலிகமாக இழக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் மின்வெட்டு
மின் உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட மின்வெட்டுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் சவால்கள் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையில், செயலிழந்த மின்னாக்கியை மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இன்று முதல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள்
இதனையடுத்து, நாட்டின் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மேலதிக மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், நாடளாவிய மின்சாரத் தடை எவ்வாறு ஏற்பட்டது, மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் மற்றும் மின் விநியோகத்தை மீளமைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |