மின்தடைக்கு எதிர்ப்பு -யாழில் இன்றிரவு போராட்டம் (காணொலி)
jaffna
protest
powercut
By Sumithiran
மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று இரவு 8.30 மணியளவில் ஏ-9பிரதான வீதி நல்லூர் செம்மணி வளைவுப் பகுதியில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், சயந்தன் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.









1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி