நாளையும் பலமணிநேர மின் வெட்டு - வெளியானது அறிவிப்பு
இலங்கையில் நாளை வியாழக்கிழமையும் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம் பகல் வேளையில் காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப் பகுதியில் 5 மணி நேரமும், இரவு 06 மணி முதல் 11 மணி வரையான காலப் பகுதியில் இரண்டரை மணித்தியாலமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளை வியாழக்கிழமை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் புதிய அட்டவணையானது இன்றைய மின்வெட்டு கால அட்டவணையைப் போன்றே இருக்கும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியுள்ளது.
E, T, U, V மற்றும் W ஆகிய குழுக்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் பகல் நேர மின்வெட்டு காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் இரவு நேர மின்வெட்டு மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை F, P, Q, R மற்றும் S குழுக்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மதியம் 1.00 மணி முதல் மாலை ஆறு மணி வரை பகல் நேரம் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் இரவு நேர மின்வெட்டு இரவு 8.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கூறியுள்ளது.
