இலங்கையின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு
நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளமை இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையின் பல பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், மின்வெட்டினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் அதன் தாக்கம் குறித்த முழுமையான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
திடீர் மின்வெட்டு
மின்வெட்டுக்கான காரணம் மற்றும் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் நேரம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |