மீண்டும் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்
புதிய இணைப்பு
நாடு முழுவதும் இன்று (17) காலை ஏற்பட்ட திடீர் மின்தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 50 வீதமான பகுதிகளுக்கு தற்போது மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதான தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கான மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.
இன்று மாலைக்குள் முழுமையாக சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படும் என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
மூன்றாம் இணைப்பு
நாடு முழுவதும் இன்று (17) காலை ஏற்பட்ட திடீர் மின் தடை, இன்று மாலைக்குள் முழுமையாக சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படும் என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.
இன்று மாலை 6.30 அளவில் முழுமையான மின் விநியோகக் கட்டமைப்பையும் மீள இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும் என அந்த நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சில மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதாகப் பரவும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை எனவும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அனல் மின் நிலையம் மாத்திரம் உரிய முறையின்படி தற்காலிகமாகச் செயற்பாடுகளிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளுக்கு ஏற்கனவே மின் விநியோகம் மீள வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், மாலை நேரமாகும் போது முழு மின்சாரக் கட்டமைப்பும் முற்றிலுமாகச் சீரமைக்கப்படும் என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாம் இணைப்பு
திடீர் மின்தடை குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை முழுவதும் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை விரைவாக மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மேல் கொத்மலை நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரத் தடை ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு
இலங்கையின் பல பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், மின்வெட்டினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் அதன் தாக்கம் குறித்த முழுமையான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
திடீர் மின்வெட்டு
மின்வெட்டுக்கான காரணம் மற்றும் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் நேரம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |