சீனாவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
சீனாவில் (China) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
இந்த நிலநடுக்கமானது இன்று (16.05.2025) அதிகாலை யுனன் மாகாணம் - குன்மிங் நகரை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இது ரிச்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.
பச்சை எச்சரிக்கை
குறித்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EQ of M: 4.5, On: 16/05/2025 06:29:51 IST, Lat: 25.05 N, Long: 99.72 E, Depth: 10 Km, Location: China.
— National Center for Seismology (@NCS_Earthquake) May 16, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/08mQNfOwyd
இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பச்சை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
