எகிப்து கடற்கரைக்கு அப்பால் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Earthquake
Egypt
World
By Sathangani
எகிப்து கடற்கரைக்கு அப்பால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (03) அதிகாலை 5.4 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் சூயஸ் நகரிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்ததாக எகிப்து அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள்
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதங்களோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு தகவலும் பதிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை நிலநடுக்கம் உணரப்பட்ட இடங்களில் தனது அவசரகால மீட்புத் திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளதாக எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் எல்லைக்குள் நுழைந்த 60,000 பேர் : நீரில் மூழ்கியும் கூட்ட நெரிசலில் சிக்கியும் 67 பேர் பலி!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்