ஆர்ப்பாட்டத்தை அடுத்து குடும்பத்துடன் ஹெலியில் தப்பிச் சென்ற அரசியல்வாதி
people
protest
escape
helicopter
politician
kegalei
By Sumithiran
கேகாலையில் (04) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆளும் தரப்பின் அரசியல்வாதியொருவர் தனது குடும்பத்துடன் தனியார் நிறுவன ஹெலிகொப்டரில் தப்பிச் சென்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கேகாலை சுதந்திர மாவத்தையில் போராட்டம் நடத்தப்பட்டவேளை, கேகாலை மாநகர சபை மைதானத்தில் ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டது.
அப்பகுதியைச் சேர்ந்த சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவர் தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
விமானம் கண்டியை நோக்கிப் பறந்தாக தெரிவிக்கப்படுகிறது.
கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்தின் வீடும் மாநகரசபை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி