காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞன் மாயம் : சக்தி வாய்ந்த அரசியல்வாதியிடம் விசாரணை
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் ஒருவர் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்கவிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இளைஞன் கடத்தப்படுவதற்கு முந்திய தினம்
குறித்த இளைஞன் கடத்தப்படுவதற்கு முந்திய தினம் முன்னாள் முதலமைச்சருக்கு இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்ததையடுத்து இந்த விடயங்கள் தொடர்பில் காவல்துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தனது மகளின் பிரச்சினை தொடர்பில்
குறித்த சந்தேக நபர் தனது மகளின் பிரச்சினை தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்று காவல்துறையில் முறைப்பாடு செய்து சம்பவத்தை தீர்த்து வைக்குமாறு தெரிவித்ததாக அதுல விஜேசிங்க(Atula Wijesinghe) குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |